என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திமுக பிரமுகர் மரணம்
நீங்கள் தேடியது "திமுக பிரமுகர் மரணம்"
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்த திமுக பிரமுகர் மயங்கி விழுந்து பலியானார். #DMK
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 95). தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவர் வேடப்பர் கோவில் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். கருணாநிதி மீது அதிகபற்று வைத்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னை காவிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே கருணாநிதி உடல்நிலைக் குறித்து முரண்பட்ட தகவல் வலைதளங்களில் வெளியாகின. இதையறிந்த சங்கர் மனவேதனை அடைந்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பூதாமூர் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தி.மு.க.நகர செயலாளர் தண்டபாணி, இளைஞரணி குமார் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இறந்துபோன சங்கருக்கு ருக்மணி என்ற மனைவியும், நல்லமுத்து, அல்லிமுத்து, ஆறுமுகம், இளையபெருமாள் ஆகிய 4 மகன்களும் உள்ளனர். #DMK

×

X